Categories
தேசிய செய்திகள்

இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார் பிரதமர்…!!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று செலுத்திக் கொண்டார்.

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாம் தவணை கொரோனா நோய்த்தடுப்பூசி செலுத்திக் கொண்டார். மார்ச் 1 ஆம் தேதி முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Categories

Tech |