நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததில் இருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மதத்தின் பெயரால் , மாட்டின் பெயரால் வன்முறை சம்பவம் என்பது அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி மக்கள் தாக்கப்படுவது அதிகமாக வடமாநிலங்களில் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் தமிழகத்திலும் அரங்கேறியது. நாகப்பட்டினத்தில் மாட்டுக்கறி உண்டதற்காக முகம்மது பைசான் தாக்கப்பட்டார்.
இந்நிலையில் கேரள மாநிலத்தின்DGP யாக பணியாற்றிய ஜேக்கப் தாமஸ் அரசின் ஊழல் குறித்து புத்தகம் எழுதியதற்காக ஓராண்டுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து ஜேக்கப் தாமஸ் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கேரள மாநில அரசுக்கு த்திய நிர்வாக தீர்ப்பாய உத்தரவிட்டது. இவர் சமீபத்தில் திருச்சூரில் நடந்த ராமாயணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது , ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் தடைசெய்யப்பட்ட நாடாக நாம் மாற முடியாது.’ஜெய் ஸ்ரீராம்’ என முழங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்ற அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.