நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை பரவ தொடங்கியுள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.மேலும் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோணா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். தமிழகம், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.