பிரான்சின் சுகாதாரத்துறை அமைச்சர் தற்போது வரை நாட்டில் ஏறக்குறைய 10 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. கொரோனாவின் மூன்றாம் கட்ட அலையின் பிடியில் பிரான்ஸ் உள்ளது. இதனால் கொரோனா பரவலை குறைப்பதற்காக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரான்சின் சுகாதார அமைச்சரான ஒலிவியே வெரோன் கூறியுள்ளதாவது, பிரான்சில் தற்போது வரை ஏறக்குறைய 10 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் கடந்த ஒரே நாளில் 271448 நபர்கள் தங்களின் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்கள். மேலும் 1,19,729 நபர்களுக்கு இரண்டாம் டோஸிக்கான தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் செலுத்தப்பட்ட முதல் குரல் கொரோனா தடுப்பூசியில் தொடங்கி தற்போது வரை 97, 97, 957 நபர்களுக்கு முதல் டோஸ் தடுப்பு ஊசிகள் மட்டுமே செலுத்தப்பட்டிருக்கின்றன. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 14.6% தான் என்பது குறிப்பிடத்தக்கது.