திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், வெப்பநிலை சற்று குறைவாக காணப்படுவதாலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் தேர்தலை முன்னிட்டு தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக முக்கிய சாலைகள் திணறியது. மேலும் அதிகரித்து வரும் கோடை வெயில், வார விடுமுறை மற்றும் தேர்தல் விடுமுறை ஆகியவற்றின் காரணமாக சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். கொடைக்கானலில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், வெப்பநிலை சற்று குறைவாக இருப்பதாலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களான பைன் மர சாலை, பிரையண்ட் பூங்கா, குணா குகை, மோயர் சதுக்கம், கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மாலையில் குளிர்ந்த காற்றும், பகலில் மிதமான வெப்பமும் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலாத்தலங்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.