திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவர் உட்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்கு மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த கார்த்திக் (24), லோகேஷ் (44), நல்லதம்பி (41), பெரியசாமி (62), ஜோசப் (46) ஆகிய 5 பேர் மீதும் கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப்ப்பதிந்து பின் கைது செய்தனர். அதேபோல் பெரும்பாறை பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கார்த்தி (42), வேல்முருகன் (26), கார்த்திகேயன் (34), கணேசன் (51) ஆகிய 4 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் செய்தனர்.