Categories
உலக செய்திகள்

மாடர்னா என்ற புதிய தடுப்பூசி…. அமெரிக்க நிறுவனம் தயாரிப்பு…!!!

கொரோனா வைரஸை  கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க நிறுவனம் மாடர்னா என்ற புதிய வகை தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள்  தடுப்பூசிகளை கண்டுபிடித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க நிறுவனம் மாடர்னா என்ற தடுப்பூசியை தற்போது தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்து நாட்டு மக்கள்  தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.

தற்போது பயன்பாட்டில் உள்ள  ஃபைசர் பயோன்டெக் மற்றும் ஆக்ஸ்ஃப்போர்டு  அஸ்ட்ராஸெனகா போன்ற தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனா தடுப்பூசித் திட்டத்தில் 3 வதாக மாடர்னா தடுப்பூசியும்  இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்தில் முதல் முறையாக காமாஷ் தன்ஷையா், வேல்ஸ்  போன்ற   பிராந்தியங்களைச் சேர்ந்த மருத்துவமனையில் இந்த தடுப்பு ஊசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

Categories

Tech |