Categories
சினிமா தமிழ் சினிமா

நான் ஒரு மண்ணு…. கர்ணன் பட நடிகை அதிரடி பேட்டி…!!

கர்ணன் பட நடிகை நான் ஒரு மண் மாதிரி என்று கூறியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இப்படம் வரும் 9-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “நான் நடித்த ஜூன் படத்தை பார்த்து இப்படத்திற்காக என்னை மாரிச்செல்வ ராஜ் தேர்வு செய்துள்ளார்.

எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்ததால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த படத்தில் எனக்கு மேக்கப் கிடையாது. நான் ஒரு மண் மாதிரி. மண்ணை அழகாக்குவது டைரக்டர்களின் கையில் தான் இருக்கிறது. கர்ணன் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே படப்பிடிப்பிற்காக தேர்வு செய்யப்பட்ட ஊருக்கு சென்று தங்கி விட்டேன். ஆகையால் அந்த ஊர் பெண்ணாகவே மாறி இப்படத்தில் நடித்து உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |