உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஒரு சில காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு சில வீடியோக்கள் பார்ப்பதற்கு அரியவகை நிகழ்வாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
21 விநாடிகள் ஓடும் அந்த காட்சியில் மனிதர்கள் மூச்சு விடுவது போல காட்டுக்குள் ஒரு பகுதியில் பூமியானது சற்று மேலே எழுந்து பின்னர் கீழே அமுங்குவது பார்ப்பதற்கு மனிதர்கள் மூச்சி விடுவது போலவே இருக்கிறது. இந்த காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது .இந்த காட்சியை பார்த்த பலரும் மனிதர்கள் மொச்சை விடுவது போல இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், பலமாக காற்று அடிக்கும்போது மெலிதான வேர்களைக் கொண்ட மரங்கள் காற்றில் அசையும் போது அவை பிடித்துக் கொண்டிருக்கும் மேல் பகுதியானது மேலே எழும்புகிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/i/status/1378037239112888324