முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் A-வா, U-வா என்று நடிகர் சாந்தனு கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபல நடிகர் சாந்தனு, ஸ்ரீதர் இயக்கத்தில், சரவண பிரியன் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக பிரபல ஹீரோயின் அதுல்யா நடித்துள்ளார். மேலும் மனோபாலா, மயில்சாமி, யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், ஊர்வசி, மதுமிதா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ரொமான்டிக், காமெடி திரைப்படமாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. “முருங்கைக்காய் சிப்ஸ்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலரை பார்த்து நடிகர் சாந்தனு இது A-வா, U-வா என்று கேட்டுள்ளார். குறிப்பாக இதுதிரைப்படம் இளம் ஜோடிகளின் முதலிரவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் நேற்று வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் ட்ரைலர் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.