திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியிலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதையடுத்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பழனி அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சை அளிப்பதற்காக வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தனி வார்டு 100 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது.