நியூசிலாந்து அரசு கொரோனா காரணமாக இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு பயணம் செய்பவர்களுக்கு தற்காலிகத்தடை விதித்திருக்கிறது.
நியூசிலாந்து நாட்டின் அதிபர் ஜஸிந்தா ஆர்டெர்ன், தங்கள் நாட்டின் குடிமக்களும், இந்தியாவில் இருந்து வரும் பிற பயணிகளும் நியூசிலாந்திற்குள் வருவதற்கு, ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 4 மணியளவிலிருந்து ஏப்ரல் 28-ஆம் தேதி வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே இந்த தடையால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கூடிய செயல்பாடுகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தீவிரமாக இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 1,15 ,736 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.