Categories
உலக செய்திகள்

தியானத்திற்காக சென்ற புத்ததுறவி… தண்ணீரால் சூழப்பட்ட குகை… நான்கு நாட்களுக்கு பின் நடந்த அதிசயம்…!!

குகைக்குள் மாட்டிக்கொண்ட புத்தத் துறவி நேற்று காலை பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் இருக்கும் குகைகளில் சிவாலயங்கள் உள்ளன. இந்த சிவாலயத்திற்கு புத்த துறவிகள் தியானம் செய்வதற்காக வருவது வழக்கமான ஒன்றாகும். அவ்வாறு 46 வயதான துறவி ஒருவர் கடந்த சனிக்கிழமை தியானம் செய்வதற்காக phitsanulok கிராமத்திலுள்ள குகைக்குள் நுழைந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது.

அதன்பின் சில நிமிடங்களில் குகையின் நுழைவாயில் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் துறவி குகைக்குள் உயர்ந்த இடத்தில் சென்று தன்னை காப்பாற்றிக் கொண்டுள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து வெளியே வராததால் கிராம மக்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் நீர் மூழ்காளர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுடுள்ளது.

அதன்படி நேற்று காலை குகைக்குள் சுமார் 12 மீட்டர் கீழே சென்று துறவியை கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவருக்கு ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டு அவர் பாதுகாப்பாக குகையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டுள்ளார். இவர் கடந்த 4 நாட்களாக குகைக்குள் மாட்டிக்கொண்டு பின்பு பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |