தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்ததால், ஊரடங்கு குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து திரையரங்குகளிலும் மீண்டும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.