தாராள பிரபு படத்தின் டைட்டில் டிராக் பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் டைட்டில் ட்ராக் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது.
100 mil 💥Another century in the kitty! Love you guys 🙏🏻#DharalaPrabhu https://t.co/X23S1Zg8HZ@krishnammuthu @VigneshShivN @iamharishkalyan @TanyaHope_offl @Screensceneoffl @nixyyyyyy @sidd_rao @SonyMusicSouth pic.twitter.com/5XF6WdpHLm
— Anirudh Ravichander (@anirudhofficial) April 7, 2021
இந்நிலையில் தாராள பிரபு படத்தின் டைட்டில் ட்ராக் பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளதை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர் .