நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதை விரைவு படுத்துவதற்காக மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துவருகின்றது.
தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ம் அலை, நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, தற்போது இந்தியாவில் ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து 45 வயது மேற்பட்டோருக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.இந்த பிரிவை சேர்ந்த மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவேண்டும், என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே இந்த 45 வயது மேற்பட்ட பிரிவினருக்கு எளிதாக தடுப்பூசி சென்றடைய ,மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த பிரிவினரை சேர்ந்த மக்கள்,அவர்கள் பணி புரியும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் ,உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் சேவை துறைகளில் பணிபுரியும் 45 வயது மேற்பட்டோருக்கு , பணிபுரியும் இடத்திலேயே கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் வகையில், மத்திய அரசு சிறப்பு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், இந்தத் திட்டத்தை பற்றி ,அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதத்தின் வாயிலாக எழுதி அனுப்பியுள்ளனர்.
அதில் பணியிடத்தில் தடுப்பு மருந்து போட்டுக் கொள்ளும் ,ஆர்வமுள்ள சுமார் 100 பேருக்கு அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே தடுப்புமருந்தை வழங்க, நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. பணியிடங்களில் 45 வயது மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பணியிடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதோடு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும் ,தனியார் பணியிடங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தனியார் மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெற வேண்டும் ,என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.