நடிகை சமந்தா தனது சம்பளத்தை திடீரென குறைத்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அனுஷ்கா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகர் அடுத்ததாக சகுந்தலை புராணக்கதையை மையமாக வைத்து திரைப்படம் எடுத்து வருகிறார். இத்திரைப்படத்தில் சகுந்தலையாக நடிக்க முதலில் அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் இறுதியில் சமந்தா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். நடிகை சமந்தா இப்படத்தில் நடிக்க இரண்டரை கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால் நடிகை சமந்தா இதற்கு முன் நடித்த படங்களுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் ஏன் சம்பளத்தை குறைத்துள்ளார் தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால், இப்படத்தில் தனது சகுந்தலை கதாபாத்திரம் பிரதானமாக இருப்பதாலும், தான் நடிக்கும் முதல் புராணப் படம் இது என்பதாலும் 50 லட்சம் ரூபாய் குறைத்து சம்பளம் வாங்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ் மற்றும் தெலுங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.