ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக ரோஜா சீரியல் டி.ஆர்.பியில் உச்சத்தில் இருக்கிறது . இந்த சீரியலில் சிபு சூரியன் கதாநாயகனாகவும் பிரியங்கா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
நடிகை பிரியங்கா தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர். இதையடுத்து இவர் ரோஜா சீரியல் மூலம் பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில் நடிகை பிரியங்கா தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .