Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கும்பலா பேசிட்டு இருந்தவங்க திடீர்னு இப்படி பண்ணிட்டாங்க…. 2 வாலிபர்களுக்கு நேர்ந்த சோகம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் போதையிலிருந்த கும்பலில் தகராறு ஏற்பட்டதில் மது பாட்டிலால் அதிலிருந்த இரு வாலிபர்களை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வசித்து வந்த அர்ஜுன், செப்பேடு பகுதியில் வசித்து வந்த சூர்யா மற்றும் சில வாலிபர்கள் மதுபோதையில் கூட்டமாக இருந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கும்பலில் இருந்த சில நபர்கள் சூர்யா மற்றும் அர்ஜுனை அங்கிருந்த மது பாட்டிலால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்கள்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர் அவர்கள் இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அரக்கோணம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |