Categories
உலக செய்திகள்

8 வருடமாக தமிழ்ப்பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. இலங்கை தம்பதி மீது அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்..!!

ஆஸ்திரேலியாவிற்கு வீட்டு வேலை செய்வதற்காக இந்திய பெண்ணை அழைத்து சென்று  இலங்கை தம்பதியினர் எட்டு வருடங்களாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

விக்டோரியா உச்சநீதிமன்றத்தில் நேற்று இலங்கை தம்பதியினர் பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை, அரசு வழக்கறிஞர் Richard Maidment நீதிமன்றத்தில் விவரித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டு பெண்ணை ஏமாற்றி ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துசென்றுள்ளனர்.

தினந்தோறும் 3.39 டாலர்கள் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதை தெரியப்படுத்தியுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றின் மூலம் அந்த தம்பதியினர் பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் கிடைத்துள்ளது.

அதாவது இலங்கையைச் சேர்ந்த கணினி பொறியாளர் கந்தசுவாமி கண்ணன் மற்றும் அவரின் மனைவி குமுதினி. இவர்களது மூன்று குழந்தைகளை கவனிப்பதற்காக தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்ற பிறகு இரண்டு தடவை மட்டுமே அந்த பெண்ணை நாட்டிற்கு செல்ல அனுமதித்திருக்கின்றனர்.

மேலும் மூன்றாவது முறையாக கடந்த 2007ம் வருடம் அந்தப் பெண் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பிய பின்பு தான் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். அதன் பிறகு கடந்த 2015ம் வருடம் மருத்துவ உதவி குழுவினரால் குளியலறையில் சிறுநீரில் கிடந்த அந்த பெண் மீட்கப்பட்டுள்ளார். அதன் பின்பு தான் பல தகவல்கள் வெளிவந்திருக்கிறது.

அந்த பெண் கூறுகையில், என்னை அடித்து உதைப்பார்கள். மேலும் என் காலில் குமுதினி கொதிக்கும் தண்ணீரை ஊற்றியதோடு முகத்திலும் கொதிக்கும் தேநீரை ஊற்றினார். கைகளில் கத்தியால் கீறினார் என்றார். மேலும் அதிகாலை 5;30 மணியிலிருந்து மறுநாள் காலை 3;00 மணி வரை தொடர்ந்து வேலை செய்ய வைத்ததாகவும், ஒரு மணிநேரம் மட்டும் தான் தூங்குவதற்கு அனுமதி தருவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்த வழக்கினை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த ரிச்சர்டு கூறுகையில், பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை குமுதினி அடித்து உதைத்து கொடுமைப்படுத்தும் போதும் அதனை கண்ணன் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அவர் அதை தடுக்க முயற்சிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த பெண்ணிற்கு தேவைப்படும் அடிப்படையான உரிமைகள் கூட கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வீட்டின் கதவை யாரேனும் தட்டினால் கூட கண்ணன் மற்றும் அவரின் மனைவி கூறினால் மட்டுமே திறக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அந்த பெண் இருந்துள்ளார். இவ்வாறான குற்றச்சாட்டுகள் அந்த தம்பதி மீது சுமத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அதனை மறுத்துள்ளனர். இந்நிலையில் வழக்கு தொடர்ந்து வருகிறது.

Categories

Tech |