Categories
தேனி மாவட்ட செய்திகள்

தோட்டத்துக்கு போனவரு இத பார்த்துட்டு ஷாக் ஆயிட்டாரு…. அசால்டாக பிடித்த வாலிபர்…. காட்டிற்குள் விட்ட வனத்துறையினர்….!!

தேனியில் தோட்டத்திற்குள் மலைப் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உரிமையான தோட்டம் அதே பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் தயாளன் வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தோட்டத்திற்குள் மலைப்பாம்பு புகுந்தது. அந்த மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த தயாளன் பாம்பினை பிடிக்கும் வீரரான ரகு என்பவருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரகு மலைப்பாம்பை அசால்ட்டாக பிடித்து தேவாரத்திலிருக்கும் வனத்துறை அலுவலர்கலிடம் அதனை ஒப்படைத்துள்ளார். அதன்பின் வனத்துறையினர் மலைப்பாம்பை வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர்.

Categories

Tech |