பிரபல திரைக்கதை எழுத்தாளரும், இயக்குனருமான விஜயேந்திர பிரசாந்த்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரும், பிரபல இயக்குனர் ராஜமௌலியின் தந்தையுமானவர் விஜயேந்திர பிரசாத். இவர் தான் ஜெயலலிதாவின் தலைவி படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் மெர்சல்,பாகுபலி, மணிகர்ணிகா ஆகிய படங்களுக்கும் இவர் திரைக்கதை எழுதியுள்ளார்.
இந்நிலையில் உடல்நலம் சரியில்லாது இருந்த விஜயேந்திர பிரசாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஆகையால் அவர் தனிமை கொடுத்துக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.