திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுக்குவார்பட்டியில் அல்போன்ஸ் (34) என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். மேலும் இவர் கடும் வயிற்று வலியால் கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அல்போன்ஸ் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து நிலக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.