அந்தகன் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன் . தியாகராஜன் இயக்கும் இந்த படத்தில் பிரியா ஆனந்த், யோகிபாபு, சிம்ரன், கார்த்திக், மனோபாலா, கேஎஸ் ரவிக்குமார், ஊர்வசி, பூவையார், லீலா சாம்சன், செம்மலர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
Joint the sets of #Andhagan today..privileged to be pairing with @thondankani https://t.co/nDnV9GeO1j
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) April 7, 2021
மேலும் இந்த படத்தில் பிரபல நடிகர் சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் இந்த படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.