Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி… ரத்த உறைவை ஏற்படுத்துமா…? வெளியானது EMA முடிவு…!!

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ரத்த உறைவு பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும் இது மிகவும் அரிய பக்கவிளைவு தான் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் சீரமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 25 மில்லியன் ஐரோப்பியர்களுக்கு கொரோனா வைரசுக்கு எதிரான அஸ்ட்ராஜெனேகா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 86 பேர் மட்டுமே இந்த ரத்த உறைவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்ட இரண்டு வாரங்களில் குறைந்த அளவிலான ரத்தம் பிளேட்டுகள் இணைந்து ரத்த உறைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக EMA முடிவு வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியில் இருக்கும் ஆபத்தை விட அதன் நன்மைகள் மிக அதிகமாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் சீரமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் இரத்த உறைவு பிரச்சனையை மிகவும் அரிதான பக்க விளைவுகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று EMA வலியுறுத்துகிறது. இந்த ரத்த உறவு பிரச்சனை வயது மற்றும் பாலின அடிப்படையில் பாதிக்கப்படுவதாக இல்லை. ஆனாலும் 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு இந்த பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக EMA தெரிவித்துள்ளது.

Categories

Tech |