Categories
சினிமா தமிழ் சினிமா

சபாஷ்…. சரியான போட்டி…. ரஜினியுடன் மோதும் கமல்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

ரஜினி மற்றும் கமல் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. சிவா இயக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். மேலும் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகிய பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் விக்ரம். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் பஹத் பாசில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

திட்டமிட்டபடி இப்படம் முடிக்கப்பட்டால் கமலின் விக்ரம் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் ரஜினி,கமல் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானால் இரு படங்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |