வாட்ஸ்அப் சாட் பாக்சில் கலர் மாற்றும் வசதி மற்றும் வாய்ஸ் மெசேஜை ஸ்பீடு செய்து கேட்கும் ஆப்சன்கள் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், யூசர்களை திருப்திப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அப்டேட்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இப்போது ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய நிறுவனம் தயாராகி வருகிறது. அதாவது, பயனர்கள் பயன்பாட்டின் உள்ளே வண்ணங்களை மாற்ற அனுமதிக்கும் புதிய அம்சத்தில் வாட்ஸ்அப் இப்போது செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் பயனர்களை Chat Box வண்ணங்களை மாற்றவும், திரையில் text க்கு பச்சை நிறத்தில் dark shade தேர்வுசெய்யவும் அனுமதிக்கும்.
மேலும், சில கூடுதலான புதிய அப்டேட்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப்பில் அதிகப்படியான வாய்ஸ் மெசேஜ்கள் (Voice message) பகிரப்படுவது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டது. அதில், நண்பர்கள் அனுப்பும் வாய்ஸ் மெசேஜை ஸ்பீடு செய்து கேட்கும் வசதி வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன்படி, வாட்ஸ்அப் சாட் பாக்சில் நண்பர்கள் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தால், அதனை வேகப்படுத்தி கேட்கும் அப்டேட்டும் கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.