பெங்களூருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை மர்ம ஆசாமிகள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது பேசிய அவர்கள், “நீங்கள் காமசூத்ரா கோல்டு மெடிசின் மாத்திரையை வென்றுள்ளீர்கள். அதற்கான வரியை செலுத்தினால் அந்த மாத்திரையோடு உங்களுக்கு பெரிய தொகை ஒன்று வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர்.
இதை நம்பிய அந்த ஆட்டோ டிரைவரும் மாத்திரை மற்றும் பெரும் தொகைக்கு ஆசைப்பட்டு ரூபாய் 2.17 லட்சம் வரை கொடுத்து ஏமாந்துள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த ஆட்டோ டிரைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.