நடிகர் விஜய் தளபதி 65 படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்றுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜையை சிறப்பாக நடைபெற்றது. பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. மேலும் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து தனது வாக்கை பதிவு செய்துவிட்டு சென்ற வீடியோக்கள் வெளியாகி இணையத்தை கலக்கியது.
இதைத்தொடர்ந்து தளபதி 65 படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் ஜார்ஜியா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியானது . இந்நிலையில் ஜார்ஜியாவில் நடிகர் விஜய்யை அங்கிருந்த ரசிகர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.