Categories
உலக செய்திகள்

மணமேடையில் காயத்துடன் மாப்பிள்ளை…. கலாய்த்த நெட்டிசன்கள்…. மணப்பெண் உருக்கமான பதிலடி…!!!

இந்தோனேஷியா அடுத்த கிழக்கு ஜாவாவை சேர்ந்தவர் சுப்ராப்டோ. இவருக்கும் எலிண்டால் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து திருமணத்தின் போது அந்த மணப்பெண் அழகான ஆடை அலங்காரத்துடன் மணமேடையில் அமர்ந்துள்ளார். ஆனால் மாப்பிள்ளை உடல் முழுவதும் காயங்களுடன் சட்டை போடாமல் அரைக்கால் சட்டையுடன் அமர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வைரலாக பரவி வந்தது. இதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் சிலர் இது பாரம்பரிய முறை யாக கூட இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தற்போது அந்த பெண் விளக்கம் அளித்துள்ளார். அதாவது திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் மணமகன் பெட்ரோல் வழங்குவதற்காக சென்றபோது ஏற்பட்ட தீக்காயத்தில் அவருடைய உடல் முழுவதும் காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

அதனால் தான் சட்டை அணியாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தீக்காயம் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாப்பிள்ளை சுயநினைவை இழந்து விட்டதாகவும் அந்த பெண் வேதனை தெரிவித்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் அந்த பெண்ணை பாராட்டியும் தங்களை சோகத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |