நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள வணக்கம்டா மாப்ள படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். தற்போது இவர் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிகில் பட நடிகை அமிர்தா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் டேனியல், ரேஷ்மா, ஆனந்தராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Here goes the trailer of #VanakkamDaMappilei https://t.co/ijovtydNuC @rajeshmdirector @Actor_Amritha @Danielanniepope @SunTV @reshupasupuleti #pragathy
— G.V.Prakash Kumar (@gvprakash) April 8, 2021
சன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் சன் டிவியில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் ‘வணக்கம்டா மாப்ள’ படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.