குக் வித் கோமாளி மணிமேகலையின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது .
சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் மணிமேகலை. இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை மிக கலகலப்பாக தொகுத்து வழங்கி வந்தார் .
தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார் . இவர் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் . இந்நிலையில் மணிமேகலை சிறுவயதில் தனது அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் வெளியாகியுள்ளது.