தூத்துக்குடியில் காதலிக்குப் பரிசு வழங்குவதற்காக 17 சவரன் நகையை கொள்ளை அடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி ரோச் காலனியை சேர்ந்த ஆஷா கடந்த பிப்ரவரி மாதம் சாலையில் சென்று கொண்டிருக்கும் மர்ம நபர்கள் 17 சவரன் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ஆஷா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருடன் கேடிஎம் பைக்கை பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.
மேலும் அந்தத் திருடர்கள் இருவரும் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அங்கு இருந்த போலீஸ் அதிகாரிகளை பார்த்து பயந்து பின் வாங்கியுள்ளனர். இதனைக் கண்டு சந்தேகமடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர்கள் தூத்துக்குடி முத்தையாநகரில் வசித்து வரும் நயினார் என்பது தெரியவந்தது.
அவர்களை போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது ஆஷாவிடமிருந்து 17 சவரன் நகையை கொள்ளையடித்தை ஒப்புக்கொண்டனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். தன் காதலிக்கு ஐபோன் வாங்கி பரிசாக கொடுப்பதற்காக இந்தத் திருட்டை நயினார் செய்ததாக கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.