Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவில் விசேஷத்தில இப்படி நடந்திருக்கு…. பங்குனி உத்திரத் திருவிழா…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் காவல்துறையினர் 18 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலிருக்கும் கோவில்களிலும் நடைபெறும் திருவிழா மிகவும் கோலாகலமாக இருக்கும். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் அழகியநம்பியார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்று வந்தது.

இதற்கிடையே இத்திருவிழாவை முன்னிட்டு அதே ஊரைச் சேர்ந்த மேலத்தெரு மற்றும் கீழத்தெரு பொது மக்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஏர்வாடி காவல்துறையினர் அப்பகுதியை சேர்ந்த சில நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |