சீனா-மலேசியா நாடுகளுக்கிடையே நட்பின் பாலமாக ‘யீயீ’ பாண்டாவானது திகழ்கிறது.
சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள நட்பினை மேம்படுத்த பல்வேறு விதமாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இதில் ஒன்றாக பாண்டாக்களை இரண்டு நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. சீனாவிலிருந்து மலேசியாவுக்கு பரிமாற்றம் செய்யப்படும் பாண்டாக்கள் இனப்பெருக்கம் செய்யவும், பிறந்த குட்டி பாண்டாக்களுக்கு 2 வயதானதும் சீனாவிற்கு கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
தற்போது மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் புதியதாக பிறந்த பாண்டாவிற்கு பெயர் சூட்டும் விழா நடத்தப்பட்டு சீன மொழியில் ‘யீயீ’ என பெயர் சூட்டப்பட்டது. ‘யீயீ’ என்ற பெயருக்கு நட்பு என்று பொருளாகும். இதை போற்றும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று கலந்துக் கொண்ட அந்நாட்டு அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.