தமிழகத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்கு சதவீதம் குறையவில்லை என்று மாவட்ட கலெக்டர் அறிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டராக விஷ்ணு செய்தியாளர்களி டம் அறிக்கை விடுத்துள்ளார். அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 5 தொகுதிகளிலும் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் மொத்தமாக 9,3,770 நபர்கள் வாக்களித்துள்ளனர்.
மேலும் வாக்குப்பதிவு நேரம் முடிந்தவுடன் அனைத்து பகுதிகளிலிருந்தும் மண்டல அலுவலர்களின் உதவி மூலம் வாக்குப்பதிவிற்க்காக பயன்படுத்தப்பட்ட எந்திரங்களை ஓட்டு எண்ணும் மையமான அரசு என்ஜினியர் கல்லூரிக்கு வந்தது. மேலும் தேர்தலில் எப்போதுமே 65 முதலாக 70 சதவீதம் வரையிலான வாக்குகள் நெல்லையில் பதிவாகும். அதேபோல் தற்போதும் குறையாமல் அவ்வாறான சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.