தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதில் பாளையங்கோட்டை தொகுதியில் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் அனைத்து மாவட்டத்திலிருக்கும் மக்கள் அவரவர் தொகுதியில் மிகவும் ஆர்வமுடன் சென்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றது. இவ்வைந்து தொகுதியையும் சேர்த்து மொத்தமாக 66.54 சதவீத வாக்குகள் நெல்லையில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து நெல்லை மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் பாளையங்கோட்டை தொகுதியில் தான் குறைவான வாக்குகள் பதிவாகியிருக்கிறது. அதாவது பாளையங்கோட்டையில் மொத்தமாக 2,73,379 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் தேர்தல் நாளன்று இத்தொகுதியில் 1,57,915 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.