Categories
உலக செய்திகள்

ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் வழக்கறிஞர் பலி.. அதிகாரப்பூர்வ தகவல்..!!

பிரிட்டனில் வழக்கறிஞர் ஒருவர் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தியதால் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டனின் உள்ள Merseiside என்ற பகுதியில் Neil Astles என்ற வழக்கறிஞர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை செலுத்தியிருக்கிறார். இதனால் அவர் பத்து நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே சுமார் 15 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் அதன் பிறகு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து Neil Astles ன் சகோதரி மருந்தாளரான Dr. Alison Astles  கூறியுள்ளதாவது, என் சகோதரருக்கு தற்போது வரை எந்த விதமான உடல்நல பாதிப்பும் இருந்ததில்லை. இரத்தக்கட்டிகளும் அவருக்கு ஏற்பட்டதில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, தன் சகோதரரின் உயிரிழப்பு எங்கள் குடும்பத்திற்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு தான். எனினும் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை மக்கள் கட்டாயமாக செலுத்திக்கொள்வது தான் நல்லது என்று கூறியுள்ளார். மேலும் என் சகோதரருக்கு ஏதோ துரதிஷ்டத்தினால் இவ்வாறு நடந்து விட்டது.

இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அதில் சில பேருக்கு தான் ரத்த கட்டிகள் ஏற்படுகிறது. அதிலும் சிலர் தான் இறக்கப்போகிறார்கள். ஆகவே தடுப்பூசி செலுத்தி கொள்வதை தொடர்ந்து நாம் கடைபிடிப்பது தான் நல்லது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களிலேயே உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் நபர் Neil Astles தான் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |