சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணச்சை பகுதியில் நாற்று நடும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் சமீபத்தில் அறுவடை செய்யப்பட்டது. இதையடுத்து அடுத்த நெல் சாகுபடிக்காக நாற்று நடவு நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே மணச்சை பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் கிணற்று பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதனை முன்னிட்டு பெண்கள் நெல் நாற்றுகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.