சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் திருப்பத்தூர் தொகுதியில் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், சிவகங்கை,மானாமதுரை, காரைக்குடி என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் மானாமதுரை தனி தொகுதி ஆகும். இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் தொகுதியில் 72.01 சதவீதமும், மானாமதுரை தனி தொகுதியில் 71.87 சதவீதமும், காரைக்குடி தொகுதியில் 66.22 சதவீதமும், சிவகங்கை தொகுதியில் 65.66 சதவீதமும் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்ச வாக்குகள் திருப்பத்தூரில் தான் தொகுதியில் பதிவாகியுள்ளது. இந்த தொகுதியில் 72.01 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.