அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவர் உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் கொலை வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் ஜோயல் என்பவர் அன்நேசி பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி கொரோனாவுக்கு எதிரான அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டுள்ளார். அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளிலேயே மூட்டுகளை அசைக்க முடியாமலும் சுவாச கோளாறாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்பின் அவரது உடம்பில் பல ரத்தக் கட்டிகள் உருவானதால் மார்ச் 18ஆம் தேதி ஜோயல் திடீரென உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் ஜோயலின் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் தேசிய மருந்துகள் பாதுகாப்பு அமைப்பும் ஜோயல் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.