Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே! பொது இடங்களில் இதை செய்தால்…. ரூ.500 அபராதம் – அதிரடி நடவடிக்கை…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |