Categories
தேனி மாவட்ட செய்திகள்

உடல்நலம் சரியில்ல அதான் இப்படி ஆயிடுச்சு…. துணை முதலமைச்சர் அஞ்சலி…. தேனி மாவட்டம்….!!

தேனியில் தமிழக துணை முதலமைச்சரின் மாமியார் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இவரது மாமியாரான வள்ளியம்மாள் என்பவர் வசித்து வந்தார். இதற்கிடையே வள்ளியம்மாளுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவர் திடீரென்று உயிரிழந்தார்.

இதனையடுத்து துணை முதலமைச்சரும், அவரது குடும்பத்தாரும் வள்ளியம்மாளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் பலரும், பொதுமக்களும் இவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். அதன்பின் அவரது உடல் உத்தமபாளையத்திலிருக்கும் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |