தமிழகத்தில் வன்னியர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5%சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது. அதுவே வன்னியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் பல சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.
மதுரையை சேர்ந்த அபிலாஷ் குமார் என்பவர் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.