வேளச்சேரியில் மறுவாக்குபதிவு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் 73 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. அதனால் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வேளச்சேரியில் ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்கு பதிவாகவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில், 15 வாக்கு ஒப்புகை சீட்டுகள் இருந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் விவிபேட் மின்னணு இயந்திரங்களைக் கொண்டு சென்றது விதிமீறல். அதனால் மறுவாக்குபதிவு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார்.