பல்வேறு பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாகி இருப்பவர் சாமியார் நித்யானந்தா. இவர் கைலாசம் என்ற நாட்டை உருவாக்கி அதில் தான் வசிப்பதாக பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவ்வப்போது வீடியோ மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். மேலும் கைலாசா நாட்டிற்கு என்று தனியாக கரன்சிகள், தங்க நாணயங்கள் மற்றும் தனி ரிசர்வ் பேங்க் உள்ளதாக அதிரடி அறிவிப்பையும் நித்யானந்தா வெளியிட்டார்.
எனவே கைலாசா தொடர்பாக பலரும் பல விதமான வதந்திகளை பரப்ப தொடங்கினர். இவர் ஏற்கனவே தன்னைத்தானே தான் கடவுள் என்றும் தான் சிவனின் அவதாரம் என்றும் கூறிக் கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது முகநூல் பக்கத்தில் திருப்பதி ஏழுமலையான் போல் காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவதற்கு போன்றும் புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் தன்னை வணங்கினால் நிதி நெருக்கடியில் இருந்து வெளியே வந்து ஏராளமான செல்வங்கள் பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது உண்மையான ஏழுமலையான் பக்தர்களை கடும் சங்கடத்துக்கு உள்ளாக்கி உள்ளது.