முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் பராமரிப்பு பணி காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா சமீபத்தில் விடுதலையானார். விடுதலையாகி பெங்களூருவில் சில காலம் ஓய்வு எடுத்து வந்தார்.
இதையடுத்து சென்னை திரும்பிய அவர் ஜெயலலிதா நினைவிடம் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டதால் அவரால் செல்ல முடியவில்லை. இந்நிலையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இன்று மதியத்திற்கு மேல் ஜெயலலிதா நினைவிடம் செல்ல உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.