Categories
உலக செய்திகள்

திருமதி இலங்கை பட்டம்… நொடியில் கைமாறிய கிரீடம்… என்ன நடந்தது?…!!!

இலங்கையில் “திருமதி இலங்கை”போட்டியில் பட்டம் பெற்ற அழகியை முன்னாள் பட்டம் பெற்ற அழகி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் திருமணமான பெண்களில் அழகிய பெண்களுக்கு “திருமதி இலங்கை” என்ற பட்டம் வழங்கும் விழா ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகின்றது. அதேபோன்று 2021 ஆம் ஆண்டுக்கான திருமணம் முடிந்த பெண்களில் அழகியாக இந்த ஆண்டு புஷ்பிகா டி சில்வா போட்டியில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் அழகி என்ற பட்டத்தை சூட்டிய சில மணி நேரத்தில் அவருக்கு அந்த சந்தோசம் நிலைக்கவில்லை.

திருமதி புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் என்பதால் இவர் இப்பட்டத்தை பெற தகுதி இல்லாதவர் என்று கூறி சென்ற ஆண்டு பட்டம் வென்ற கரோலினா ஜூரி பட்டத்தை பறித்துக் கொண்டார். எனவே திருமதி இலங்கை பட்டம் இரண்டாம் இடம் பிடித்த கரோலினா ஜூரி என்பவருக்கு வழங்கப்பட்டது. அதன்பின் கரோலினா பூஷிபிகா தலையிலிருந்த கீரிடத்தை  வேகமாக எடுத்ததால் தலையில் காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் விசாரித்தபோது புஷ்பா கணவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை இல்லாதது உண்மைதான் ஆனால் எங்களுக்கு விவாகரத்து சட்டபூர்வமாக வாங்கவில்லை என்று விசாரணையின் மூலம் தெரியவந்தது. அந்த விசாரணைக்கு பின்பு புஷ்பாவுக்கு மீண்டும் அந்த பட்டம் சூட்டப்பட்டது.

இதுகுறித்து கரோலின் மீது புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் கரோலினா கைது செய்யப்பட்டார். புஷ்பிகா டி சில்வா கைது செய்த காவல் துறையினரிடம், “நாங்கள் புகாரை திரும்பப் பெற தயார் நிலையில் உள்ளோம். ஆனால் பொது இடத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  கூறினார். ஆனால் கரோலினா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். நான் நீதிமன்றத்திற்கு வெளியே இதனை முடித்துக் கொள்ள முயற்சி செய்தேன் ஆனால் அவர் மறுத்துவிட்டார் என்றார்.

Categories

Tech |