Categories
உலக செய்திகள்

குளியறையில் அடிக்கடி தண்ணீர் தேக்கம்.. துளையை பரிசோதித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. வைரலாகும் வீடியோ..!!

ஆஸ்திரேலியாவில் ஒருவருடைய வீட்டின் குளியலறையில் 2 மீட்டர் நீளத்தில் மலைப்பாம்பு மீட்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் வசிக்கும் ஒரு தம்பதியினர் வீட்டின் குளியலறையில் தண்ணீர் தேங்குவது அடிக்கடி ஏற்பட்டுள்ளது. அது எதற்காக என்று தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர். இறுதியாக, அப்படி அதில் என்ன தான் பிரச்சனை உள்ளது என பார்ப்போம் என்று குளியலறையின் தண்ணீர் செல்லக்கூடிய துளையை பார்த்துள்ளனர்.

அங்கு இரண்டு கண்கள் பளிச்சென்று மின்னியது. இந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் துளையை பார்க்கும் ஒருவர், அதிலிருந்து இரண்டு மீட்டர் நீளத்தில் மலைப்பாம்பு ஒன்றை வெளியே எடுக்கிறார். அதாவது அந்த மலைப்பாம்பு வீட்டிற்குள் எப்படியோ நுழைந்துள்ளது.

அது குளியல் அறைக்குள் இருந்த தண்ணீர் செல்லக்கூடிய துளையில் பதுங்கி இருந்துள்ளது. இதனாலேயே அடிக்கடி தண்ணீர் வெளியேறாமல் தேங்கி நின்றுள்ளது என்பதை அறிந்த அந்த தம்பதி அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டிருக்கின்றனர். இந்த வீடியோவை பார்க்கும் பலரும் வெவ்வேறு விதமாக கமெண்ட்டுகளை பதிவு செய்து வரும் நிலையில் ஒருவர் ஆஸ்திரேலியாவை மிருகங்கள் வாழ்வதற்காக கொடுத்து விட்டு நாம் வெளியேறி விடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |