Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் லாரி ஓட்டியதால் விபரீதம்… ஒரு வயது குழந்தை பலி !!..

பல்லாவரம்  அருகே  இருசக்கரம் மீது  லாரி மோதியதில்  ஒருவயது  குழந்தை  பரிதாபமாக  உயிரிழந்தது .

சென்னை  பல்லாவரம்  அடுத்த  பம்மல்  பகுதியை  சேர்ந்த  ராஜா  தனது   மனைவி  மற்றும்  இரு  மகள்களுடன் இருசக்கர  வாகனத்தில்  சென்று  கொண்டிருந்தார். பம்மல்  அருகே  உள்ள  சாலை  சந்திப்பில்  நின்ற  போது  தறிகெட்டு  ஓட்டி வந்த  தண்ணீர்  லாரி  அவர்களின்  மீது  மோதியது . இதில்  ஒரு வயது  குழந்தை  சர்வேஸ்வரி  தலை  நசுங்கி  சம்பவ  இடத்திலேயே  உயிரிழந்தார் . லாரியின்  பின்  சக்கரம்  ஏறி  இறங்கியதில்  ராஜாவின்  மனைவி  சிந்து  பலத்த  காயம்  அடைந்தார்.

இதையடுத்து  லாரி  ஓட்டுநரை  மடக்கி  பிடித்த  பொதுமக்கள்  அவர்  குடிபோதையில்  இருந்ததை  கண்டுபிடித்து  சரமாரியாக தாக்கினர் .அதன்பின்  அங்குவந்த  காவல் துறையினர் லாரி ஓட்டுநரை  மீட்டதால்  பொதுமக்களுக்கும்  போலீசாருக்கும்  இடையில்  பெரும்  வாக்குவாதம்  நடைபெற்றது . இதையடுத்து  லாரி  ஓட்டுநரை  கைது  செய்து  விசாரணை  மேற்கொண்டு  வருகின்றனர் . படுகாயம்  அடைந்த சிந்துவுக்கு மருத்துவமனையில்  சிகிக்சை  அளிக்கப்பட்டு  வருகிறது .

Categories

Tech |